Last date for registration is 15th December 2018 | Last date for Paper Submission is 15th December 2018 | Last date for booking Accommodation for Female Participants is 20th December 2018. | Registration is Opened. Please start Registration process only after making Conference Registration fees of Rs.250/- each into Conference account.
FOUNDERS

பெயர் : TNGCTA State Conference

வங்கி : UCO BANK

கிளை : GOVT. ARTS COLLEGE, COIMBATORE

IFSCCode : UCBA0001973





அழைப்பிதழ்

தோழமையீர்,

தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகமானது தமிழக அரசின் கல்லூரிக் கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்கள் நலன் காக்கும் அரசு அங்கீகாரம் பெற்ற சங்கமாகும்.

சமூகத்திற்குப் பொருத்தமான சாதி சமய சார்பற்ற நாட்டுப்பற்றும், மனித நேயமும் மிக்க அறிவியல் பார்வை கொண்ட ஜனநாயகக் கல்வி முறையை உருவாக்கப்பாடுபடுதலை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் தனது 19 ஆவது மாநில மாநாடு மற்றும் “அனைவருக்கும் தரமான உயர்க்கல்வி – சவால்களும் சாதனைகளும்” என்ற கருதுபொருளில் கருத்தரங்கம் ஆகியவற்றை எதிர்வரும் 2019 ஜனவரி 5 மற்றும் 6 ஆகிய இரு நாட்களில் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் மேற்காணும் பொருண்மையில் கட்டுரை வழங்கவும் கலந்து கொள்ளவும் தங்களை அன்புடன் அழைக்கிறோம்.

மாநாட்டு அமைப்புக்குழு
19 ஆவது மாநில மாநாடு
கோயம்புத்தூர்

மாநாடு – கருத்தரங்கம்

"புதியதோர் உலகம் செய்வோம்" என்ற முழக்கத்தைத் தனது இலக்காக கொண்டு செயல்படும் தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மாநில அளவில் மாநாட்டினை நடத்தி வருகிறது 19 வது மாநில மாநாடு மற்றும் கருத்தரங்கம் “அனைவருக்கும் தரமான உயர்கல்வி – சவால்களும் சாதனைகளும்" என்ற பொருண்மையில் நடைபெறுகிறது இக்கருத்தரங்கில் உரிய கட்டுரைகளை கல்வியாளர்கள், ஆர்வலர்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.

கட்டுரைகள்

மாநாட்டு மலரில் இடம் பெறும் கட்டுரைகள் அனைவருக்கும் தரமான உயர்கல்வியினை அளிக்கும் இலக்கினை அடைவதற்குரிய சமூக பொருளாதார கருத்தியல்களை கொண்டு அமைந்திருக்கவேண்டும். கட்டுரை அனுப்புவதற்குரிய இறுதி நாள் டிசம்பர் 15,2018.

கட்டுரைகள் இரண்டு வரி இடைவெளியில் 6 பக்க அளவிற்கு மிகாமல் அமைந்திருக்கவேண்டும்.

உரிய மேற்கோள் மற்றும் புள்ளிவிவரங்கள் தெளிவாகவும் முறையாகவும் அமைக்கப்பட்டிருக்கவேண்டும். கட்டுரைகள் யுனிகோட் எழுத்துருவில் 12 என்ற அளவில் அமைக்கப்பட்டு mail@tngctaconf2019.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பப்படவேண்டும்.

பதிவு மற்றும் பேராளர் கட்டணம்

பேராளர்கள் 15 டிசம்பர் 2018 ஆம் நாளுக்குள் தங்கள் பெயரினைப் பதிவு செய்து கொள்ளவேண்டும். பதிவுக் கட்டணம் ரூ. 250 மட்டும் கீழ்க்காணும் வங்கிக் கணக்கில் செலுத்தி அதன் விவரத்தை மேற்காணும் மின்னஞ்சலுக்கு தெரிவிக்கவேண்டும்.

மாநாட்டு மலர் விளம்பரக் கட்டணம்

பலவண்ண விளம்பரம்


முன்னட்டையின் உள்பக்கம் ரூ. 2,00,000
பின்னட்டையின் உள்பக்கம் ரூ. 2,00,000

 

உள்பக்க விளம்பரம்

முழுப்பக்கம் ரூ. 20,000
அரைப்பக்கம் ரூ. 10,000
கால் பக்கம் ரூ. 5,000

பேராளர் கட்டணம், விளம்பரக்கட்டணம் ஆகியவற்றை கீழ்காணும் வங்கிக் கணக்கிற்கு DD / RTGS / NEFT / IMPS /MPAY வழியாக செலுத்தலாம்.

 

TNGCTA State Conference
யூகோ வங்கி
அரசு கலைக்கல்லூரி கிளை
கோயம்புத்தூர்


  • Last date for Registration : 15 Dec 2018

  • Last date for Paper Submission : 15 Dec 2018

  • Release of Conference Schedule : 02 Jan 2019

  • Conference Dates : 05 – 06, Jan 2019

  • Last date for booking Accommodation for Female Participants : 20 Dec 2018


Conference Countdown


Days
Hours
Minutes
Seconds





மாநில ஆட்சிக்குழு / மாநாட்டு அமைப்புக்குழு

முனைவர் த. வீரமணி

மாநிலத் தலைவர் / மாநாட்டுத் தலைவர்


முனைவர் இரா. தாமோதரன்

பொதுச்செயலர்


முனைவர் ஆ. கோபாலகிருஷ்ணன்

மாநிலப் பொருளர்


முனைவர் க. இரமேஷ்

மாநிலத் துணைத்தலைவர்(பொது)


முனைவர் உ. சிவப்பிரியா

மாநிலத் துணைத்தலைவர் (ம)


பேரா. சோ. சுரேஷ்

மாநில இணைச் செயலர் (பொது)


முனைவர் த. மதுரம்

மாநில இணைச் செயலர் (ம)


முனைவர் ப. ரமேஷ்

மாநாட்டுச் செயலர்


முனைவர் லூ . ராபர்ட்

மாநாட்டுப் பொருளர்