About Conference

மாநாடு – கருத்தரங்கம்

"புதியதோர் உலகம் செய்வோம்" என்ற முழக்கத்தைத் தனது இலக்காக கொண்டு செயல்படும் தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மாநில அளவில் மாநாட்டினை நடத்தி வருகிறது. 19 வது மாநில மாநாடு மற்றும் கருத்தரங்கம் “அனைவருக்கும் தரமான உயர்கல்வி – சவால்களும் சாதனைகளும்" என்ற பொருண்மையில் நடைபெறுகிறது இக்கருத்தரங்கில் உரிய கட்டுரைகளை கல்வியாளர்கள், ஆர்வலர்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.

கட்டுரைகள்

மாநாட்டு மலரில் இடம் பெறும் கட்டுரைகள் அனைவருக்கும் தரமான உயர்கல்வியினை அளிக்கும் இலக்கினை அடைவதற்குரிய சமூக பொருளாதார கருத்தியல்களை கொண்டு அமைந்திருக்கவேண்டும். கட்டுரை அனுப்புவதற்குரிய இறுதி நாள் டிசம்பர் 15, 2018.

கட்டுரைகள் இரண்டு வரி இடைவெளியில் 6 பக்க அளவிற்கு மிகாமல் அமைந்திருக்கவேண்டும்.

உரிய மேற்கோள் மற்றும் புள்ளிவிவரங்கள் தெளிவாகவும் முறையாகவும் அமைக்கப்பட்டிருக்கவேண்டும். கட்டுரைகள் யுனிகோட் எழுத்துருவில் 12 என்ற அளவில் அமைக்கப்பட்டு mail@tngctaconf2019.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பப்படவேண்டும்.

பதிவு மற்றும் பேராளர் கட்டணம்

பேராளர்கள் 15 டிசம்பர் 2018 ஆம் நாளுக்குள் தங்கள் பெயரினைப் பதிவு செய்து கொள்ளவேண்டும். பதிவுக் கட்டணம் ரூ. 250 மட்டும் கீழ்க்காணும் வங்கிக் கணக்கில் செலுத்தி அதன் விவரத்தை மேற்காணும் மின்னஞ்சலுக்கு தெரிவிக்கவேண்டும்.

மாநாட்டு மலர் விளம்பரக் கட்டணம்

பலவண்ண விளம்பரம்


முன்னட்டையின் உள்பக்கம் ரூ. 2,00,000
பின்னட்டையின் உள்பக்கம் ரூ. 2,00,000


உள்பக்க விளம்பரம்

முழுப்பக்கம் ரூ. 20,000
அரைப்பக்கம் ரூ. 10,000
கால் பக்கம் ரூ. 5,000

பேராளர் கட்டணம், விளம்பரக்கட்டணம் ஆகியவற்றை கீழ்காணும் வங்கிக்கணக்கிற்கு DD / RTGS / NEFT / IMPS /MPAY வழியாக செலுத்தலாம்.

யுகோ வங்கி
அரசு கலைக்கல்லூரி கிளை
கோயம்புத்தூர்